உள்நாட்டு செய்திகள்

கடலில் குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு; இன்னுமொருவரை காணவில்லை- முல்லைத்தீவில் சம்பவம்



முல்லைத்தீவு கடலில் இன்று சனிக்கிழமை காலை குளிக்கச் சென்ற பாடசாலை மாணவnhனருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இன்னொரு மாணவன் காணாமல் போயுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூயில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். யதூசன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை வகுப்பு முடித்துக்கொண்டு ஓரெ வகுப்பில் கற்கும் ஐந்து சண்பர்கள் முல்லைத்தீவு கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது உடுப்புக்குளத்தைச் சேர்ந்த மாணவனை நீர் அடித்துக்கொண்டு செல்வதை அவதானித்து தனது நண்பரைக் காப்பாற்றுவதற்காக சென்ற போதே குறித்த மாணவன் இவ்வாறு நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

அத்துடன், நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை மீனவர்கள் தொடர்ந்தும் தேடும் பணியில்; ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மரணமான மாணவனின் சடலம் தற்போது மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

தேர்தல் ஆணையகத்தில் ரிஷாட் முறைப்பாடு

wpengine

பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை நாளை(26) கூடுகிறது..

wpengine

TMVP கட்சியின் உறுப்பினர்களிற்கு, பணம் வழங்கி உதவி செய்த மைத்திரிபால மற்றும் கோட்டா – அம்பலப்படுத்தும் ஆசாத் மௌலானா..!

wpengine