உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை(02) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அமைதி காலம் ஆரம்பமாவதுடன், குறித்த அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

இவ்வருடம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடாத்த முடியாது – லக்ஷ்மன் யாப்பா

wpengine

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

wpengine

ஜூலை 01 முதல் தாவரவியல் பூங்காக்கள் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

News Editor