உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் வீடுகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 165 பேர் வௌியேறியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 555 பேர் தமது தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளனர்.

பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 118 பேரும், பூவரசன்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 193 பேரும், கஹகொல்ல தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 176 பேரும் மற்றும் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 68 பேரும் இவ்வாறு அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் 27,494 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதி மோசடி சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் இனது வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

wpengine

கூகுள் இலங்கையுடன் கைகோர்க்கின்றது

wpengine