உலக செய்திகள்

மேலும் 47 செயலிகளுக்கு இந்தியா தடை



(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – கடந்த மாதம் டிக்டொக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்திருந்த நிலையில் மேலும் 47 செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையில் வன்முறை, அபாயகரமான நேருக்கு நேர் ஏற்பட்ட பின்னர் லடாக் எல்லை பதட்டங்கள் தொடர்ந்ததால், 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்தது.

இந்நிலையில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ள 47 செயலிகளின் பெயர்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த செயலிகளின் பயன்பாடு இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இன்னும் 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

பர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து

wpengine

2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து…

wpengine

பசிபிக் பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

wpengine