விளையாட்டு

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – 2020 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான 20 இற்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட்; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள்

wpengine

நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

wpengine

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிக்கான நேரடி வாய்ப்பினை இழந்தது இலங்கை அணி..

wpengine