உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளில் இன்றும் கடும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று (21) கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று(21) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி சபரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

நான் செய்த வரலாற்றுத் தவறு, மனம்வருந்தும் சந்திரிக்கா..!

wpengine

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி 

wpengine

டயானாவின் MP பதவி பறிபோகுமா? வழக்கு தீர்ப்பு ஏப்ரல் 24!

News Editor