உள்நாட்டு செய்திகள்

வடக்கு புகையிரத சேவை பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு நோக்கிய புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு(16) கொழும்பு, கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை பயணித்த புகையிரதம், செனரத்கம பகுதியில் தடம்புரண்டமை காரணமாக இவ்வாறு புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, வடக்கு புகையிரத மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள், கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரத கட்டுப்பாட்டறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் ACMC வசம்: தவிசாளரானார் முன்னாள் அமைச்சர் சுபையிர்..!

wpengine

நாவலப்பிட்டி டிப்போ ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில்.. போக்குவரத்து ஸ்தம்பிதம்

wpengine

BBS இனது செயலாளர் மற்றும் மியன்மார் அசின் விராது சந்திப்பு (PHOTOS)

wpengine