உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையத்தின் தேவையினை அரசு புரிந்து கொள்ளும் – நாமல்



மத்தள சர்வதேச விமான நிலையத்தின் தேவையை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஏ330 ரக விமானம் அவசரமாக மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இக்குறித்த தரையிறப்பிற்கே நாமல் மேற்குறித்த கருத்தினை வெளியிட்டிருந்தார்.

மேலும், இதன் ஊடாக இலங்கைக்கு இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் தேவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை மூட மாட்டார்கள் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் கணக்கின் ஊடாக அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

விமான நிலையத்தைப் பயன்படுத்தாது நெற்களஞ்சியமாக பயன்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவிற்கு ஏற்கனவே நாமல் ராஜபக்ஷ கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

திட்டமிட்டபடி நாளை(04) போராட்டம் முன்னெடுக்கப்படும் – கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம்

wpengine

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை…

wpengine

SLFP தலைமை மீளவும் மைத்ரிக்கு

wpengine