ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஊடகவியலாளர்களுக்கு ரங்கஜீவவிடம் இருந்து சிவப்பு எச்சரிக்கையா?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதுடன், அவரை இழுத்துச் சென்று நீதிமன்ற பொலிஸாரிடம் ஒப்படைத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போதும் அவர் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொலிஸ் சாவடியில் வைத்து தனது கெமராவில் இருந்த மெமரி கார்டுகளை எடுத்து கொண்டதாக ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவவை, உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து குறித்த ஊடகவியலாளர் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சல்மானின் வழக்கு ஒத்திவைப்பு

wpengine

facebook ஊடாக ட்ரம்ப் இற்கு ஆதரவளித்தமைக்கு வருந்துகிறோம்.. (Photos)

wpengine

கொரோனாவினால் சீரழிந்த நாடுகள் இவைதான்

wpengine