Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா : 114 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் 02 பேரினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2080 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1955 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவில்லை!

wpengine

இலங்கை – ஜப்பானியத் தலைவர்கள் இருதரப்பு உறவுகளை மென்மேலும் வலுப்படுத்த உறுதி…

wpengine

எதிர்காலம் குறித்து இலங்கையில் நல்ல அறிகுறிகள் தென்படுகின்றது – பிரித்தானியா

wpengine