Top Story 1உள்நாட்டு செய்திகள்

விவசாயிகளுக்கு சுபீட்சமான சூழல் உருவாகியுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தைகளுக்கு அதிக விலைகளுக்கு விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று(03) விவசாயிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் தானியங்கள் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினாலேயே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோளம்,பயறு,கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள களஞ்சிய வசதிகள் தொடர்பிலும் இதன் போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

Related posts

எதிர்வரும் சில நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

‘வற்’ எதிர்ப்பு மனு விசாரணை ஒக்டோபர் 17 அன்று விசாரணைக்கு..

wpengine

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேற்றம்…

wpengine