ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

LTTE நியாயமானது – முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும்? ஞானசாரவை நான் பாராட்டுகிறேன் – கருணா பல்டி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முஸ்லிம்கள் இனவாதத்தினை கக்குவதாக தெரிவித்திருந்தார்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கான பேட்டியில் இது தொடர்பில் வர்ணனையாளர் கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார்.

குறித்த கேள்வியில் மிகவும் பலமானது தமிழீழ விடுதலை பயங்கரவாதிகளா? இல்லை முஸ்லிம் இனவாத பயங்கரவாதிகளா? என கேள்வி எழுப்பப்படுகின்றது.

குறித்த கேள்விக்கு கருணா பதிலளிக்கையில்,

“LTTE Government Fight இற்கு ஒரு காரணம்/நியாயம் இருந்தது. வடக்கு கிழக்கு காணிகள் எமக்கு கிடைக்க வேண்டும். எமக்கு சுதந்திரம் வேண்டும். எமக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும்? ஐஎஸ் யாரு? ஞானசார தேரர் சரியாகச் சரி. நான் அவரை பாராட்டுகிறேன். முஸ்லிம் அரசியல்வாதிகளை கன்ட்ரோல் (CONTROL) செய்ய வேண்டும். மக்கள் பாவம். காத்தான்குடிக்கு செல்கையில் வெல்கம் போர்ட் (WELCOME BORD)இல் எல்லாமே அரபு எழுத்துக்கள். எனக்கும் அரபு தெரியாது உங்களுக்கும் அரபு தெரியாது. என்னமோ எழுதி இருக்கிறார்கள்.

மேடை ஒன்றில் ஹிஸ்புல்லாஹ் கதைக்கையில் வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்தத் ஆறு ஓடும் என தெரிவித்திருந்தார். அவர் நினைக்கிறார் இது அரபு நாடு என்று… மற்றையவர் ரிஷாத். இப்போது இல்லை இன்னும் 20 வருடங்களில் பிரச்சினை வரும்.. ” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்பாறையில் போட்டியிடும் நான் கட்டாயம் பாராளுமன்றம் செல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குசலுக்கு போட்டித்தடை.. குசல்’ளின் போட்டித்தடை பொய்யானது.. குசலிடம் பேசுங்கள் – மஹேல

wpengine

பத்து வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

wpengine

‘இந்த அரசு விற்கும் எதனையும் வாங்க வேண்டாம்.. நாம் வந்ததற்கு பின்னர் திரும்பப் பெறுவோம்..’ மஹிந்த சர்வதேசத்திற்கு எச்சரிக்கை…

wpengine