உலக செய்திகள்

வடகொரியாவின் யொங்பியோன் அணு ஆலை செயற்பாட்டிற்கு அமெரிக்கா கண்டனம்



வடகொரியாவின் பிரதான யொங்பியோன் அணு ஆயுத உற்பத்தி ஆலை மீண்டும் முழுமையாக செயற்படவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளமைக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மேலும், தனது அணு ஆயுதங்களை தரத்திலும் அளவிலும் மேம்படுத்தவுள்ளதாகவும், அணு ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவை எத்தருணத்திலும் எதிர்க்கொள்ள தயார் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடகொரியா ஆத்திரமூட்டும் செயற்பாடுகளிலிருந்து விலகி குறித்த அணு ஆலை செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாட்டாளர் Josh Earnest  வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடகொரியா அணு ஆலையை மீள செயற்படுத்துவதை விடுத்து தன்னுடைய சர்வதேச கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நீண்ட தூர ரொக்கட்டுக்களை ஏவும் வல்லமையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாகவும் எல்லோராலும் பார்க்கப்படும் வகையில், தொடர்ச்சியாக பல செய்மதிகளை தாம் ஏவப்போவதாகவும் வடகொரியா அறிவித்த நிலையிலேயே யொங்பியொன் அணு ஆலையை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது

 

Related posts

இந்திய பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

wpengine

முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் லைபேரியா நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு..

wpengine

டெல்டா பிறழ்வு : சீனாவின் Nanjing முடங்கியது

wpengine