ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜூலை மாதம் முதல் பேரூந்து கட்டணத்தில் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை முன்வைப்பதற்கு தவறும் பட்சத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இது

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் பிரகாரம் பேரூந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் உள்வாங்கப்படுவதன் காரணமாக பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே , அரை சொகுசு பேருந்துகளின் அறவிடப்படும் கட்டணங்களை சாதாரண பேருந்துகளில் நடைமுறைப்படுத்துமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் உரிய தீர்வினை முன்வைப்பதற்கு தவறும் பட்சத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்பார்ப்புகளை கலைத்து விடைபெற்றார் கிரிஸ் கெய்ஸ்

wpengine

சவூதி அரசினால் தேடப்படும் பயங்கரவாதிகள்.. – தகவலுக்கு 30 மில்லின் அமெரிக்க டொலர்…

wpengine

கூக்குரலிடும் தேரர்கள் குப்பை கொள்கலன் பிரச்சினையில் மௌனிகளாக… –

wpengine