உள்நாட்டு செய்திகள்

கொட்டதெனியாவ சிறுமியின் புகைப்பட,வீடியோக்களை பிரசுரிக்க வேண்டாம் – NCPA



கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை (12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைகளிலிருந்து சிறுமி கடுமையாக பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு, கழுத்துநெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி பிறந்த குறித்த சிறுமியின் 5ஆவது பிறந்த தினம், நாளை என்பது குறிப்பிடத்தக்கது.

(riz)

 

Related posts

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – விசாரிக்க ஆணைக்குழு [VIDEO]

wpengine

காலாவதியாகும் நிலையில் எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள்

wpengine

தமிழக மீனவர்கள் 04 பேர் கைது..

wpengine