Top Story 2உள்நாட்டு செய்திகள்

சகல பயணிகளும் முகக் கவசம் அணிவது கட்டாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“.. எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும். ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும். சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

பேரூந்து மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சகல பேருந்துகளிலும்ஆ சனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பேரூந்து தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்..” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

09 நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில்

wpengine

இலங்கையில் HIV தொற்றுக்கு இலக்கானோர் 2,245 ஆக உயர்வு

wpengine

வெற்றியின் இரகசியம் மற்றும் பங்களாதேஷ் அணியினரின் உணர்ச்சிகள் குறித்து ஹத்துருசிங்க கருத்து…

wpengine