உலக செய்திகள்

ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ ( Maria Jesus Montero) தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடு முழுவதிலும் உள்ள பொதுக் கட்டடங்கள் , கடற்படையின் கப்பல்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 283,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27,117 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை – இராணுவத்தினர் 7 பேருக்கு 10 வருட சிறை…

wpengine

கராச்சியில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்…

wpengine

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 08 பேர் உயிரிழப்பு

wpengine