உள்நாட்டு செய்திகள்

கட்டாரில் இருந்து வரவிருந்த விமானம் இடை நிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாரில் சிக்கிய இலங்கையர்களை நாளை(26) அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் வசிக்கும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால், எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மீள் பரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

சைட்டம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க ஹர்ஷ தலைமையில் புதிய குழு…

wpengine

தொழிநுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்க தயார் – பொதுநலவாய அமைப்பு…

wpengine

மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் துமிந்த சில்வாவுக்கு சிறைமாற்றம்.

wpengine