உள்நாட்டு செய்திகள்

புகையிரத நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தற்போதைய புகையிரத நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான வார நாட்களில் ரயில்களில் பயணிக்க கூடிய அரச மற்றும் தனியார் சேவையாளர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு ரயில்வே பிரதி பொது முகாமையாளர் டீ.எச் பொல்வத்தகே நிறுவன பிரதானிகளிடம் கோரியுள்ளார்.

அந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் வாரத்திற்கான புகையிரத போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் டீ.எச் பொல்வத்தகே மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

திறந்த பல்கலையினை திறக்குமாறு இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும்…

wpengine

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர் ராஜேந்திரன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine