உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 49,784 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,903 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 249 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அவுஸ்திரேலிய அணியானது 105 ஓட்டங்களினால் முன்னிலையில்…

wpengine

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் முதல் விநியோகம்..

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

wpengine