Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – இலங்கையில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட குறித்த கடற்படை உறுப்பினர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் அவர் குணமடைந்து வெளியேறியுள்ளார் என்றும் அவர் இப்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடற்படையை சேர்ந்த 293 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி தற்போது வரை 187 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை,  இதுவரை 718 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 524 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

தாஜுதீன் கொலை – ஜனாதிபதி செயலகத்திலிருந்து சென்ற அழைப்புகள் குறித்து விசாரணை

wpengine

வேட்புமனு ஏற்கும் இறுதி நாளில் வாக்கெடுப்பு தினம் அறிவிக்கப்படும்..!

wpengine

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

wpengine