Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் முடக்கப்பட்டுள்ள 21 இடங்களின் விபரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 14, நாகலகம் வீதி,  கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64 ஆம் தோட்டம்,  கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11 குணசிங்கபுர,  வாழைத்தோட்டம் பகுதிகள்,  பம்பலபிட்டி – பிரிஷ்டா பிளேஸ்,  மருதானையின் இமாமுல் அரூஸ் மாவத்தை,  ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60 ஆம் தோட்டம், ஹெவலொக் லேன், ஒருகொடவத்த – மஜீத் பிளேஸ்,  மீத்தோட்டமுல்லை – வெடுகொடவத்தை,  பெரேரா மாவத்தை பகுதிகள்,  வெல்லம்பிட்டி – வெலேவத்தை,  மஹபுத்துகமுவ – நவாரவத்தை,  மிரிஹானை – விமலவத்த வீதி, தெஹிவளை – றப்பர் தோட்ட வீதி,  அருணாலோக்க மாவத்தை,  பிலியந்தலை பகுதியின்  கிராமோதய மாவத்தை,  பண்னிபிட்டிய – பலனவத்த ஆகிய 21 இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனைகள் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு – தோட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுள்ளனர்.

Related posts

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் தொலைபேசி சேவையை மேலும் பலப்படுத்த நடவடிக்கை…

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை – மஹ்ரூப் எம் பி திட்டவட்டம்…

wpengine

அரசியல் பழிவாங்கல் சாட்சியம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine