உள்நாட்டு செய்திகள்

சத்துரிகாவின் அரச பதவி குறித்து ஜனாதிபதி மௌனிப்பதேன்



இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள், சத்துரிகா சிறிசேனவின் பதவிநிலை குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்னும் உறுதியான தகவல் எதனையும் வழங்கவில்லை.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தை தொடர்ந்தும் எழுதி வருகிறது.

அரசாங்கப் பணியாளர்களுடன் இணைந்து சந்துரிகா அண்மையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் பல நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இந்நிகழ்வுகள் பொலன்நறுவையில் இடம்பெற்றன. இதன்போது கருத்துரைத்துள்ள சத்துரிகா, தமது தந்தையின் கனவை நனவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் குடும்ப ஆட்சிக்கு வழியேற்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதியின் கூற்றுக்கு இது மாறாக இருப்பதாக குறித்த ஆங்கில ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தில் எவ்வித பொறுப்புக்களையும் கொண்டிராத சத்துரிகா எவ்வாறு அரசப்பணியாளர்களுடன் இணைந்து சேவைகளை மேற்கொள்ள முடியும் என்று ஆங்கில ஊடகம் ஜனாதிபதி ஊடகப்பிரிவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் ஜனாதிபதியின் ஊடகம் இன்னும் உரிய பதில் எதனையும் வழங்கவில்லை. ஜனாதிபதியும் இந்த விடயத்தில் மௌனமாக இருந்து வருகிறார்.

(riz)

Related posts

மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க இராஜினாமா…

wpengine

சபரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை…

wpengine

இலங்கையின் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் கவலை …

wpengine