ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா ட்ரண்டும் உடல் எடையும்



(ஃபாஸ்ட் நியூஸ் | இங்கிலாந்து ) – கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் 15,000 இற்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இங்கிலாந்தின் 177 வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 15,100 நோயாளிகள் பற்றிய தகவல்களை திரட்டி அவர்களது வயது, பாலினம், உடல் ஆரோக்கியம் அடிப்படையில் ஒரு ஆய்வை அண்மையில் இலண்டன் இம்பீரியல் காலேஜ் மற்றும் லிவர்பூல், எடின்பர்க் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

அப்போது, பெரும்பாலான நோயாளிகள் 120 கிலோவுக்கும் அதிகமான எடையை கொண்டிருந்தமை தெரிய வந்தது. மேலும், இவர்கள் சிறிய அளவில் மட்டுமே நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்துள்ளனர் என்பதும், நோய் எதிர்ப்பு சக்தி தரும் காய்கறி, பழங்களை குறைந்த அளவில் உண்டு வந்திருக்கின்றனர் என்பதும் கண்டறியப்பட்டது.

அதாவது, இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டதால் கொரோனா எளிதில் தாக்கியுள்ளது. ஏற்கனவே, மூச்சுத்திணறல் பிரச்சினை கொண்ட இவர்களின் நுரையீரலை கொரோனா ஊடுருவி தாக்கிவிட்டது, என்பதும் இந்த விஞ்ஞானிகளின் ஆய்வில் கிடைத்த தகவல் ஆகும்.

எனினும், உடல்பருமன் கொண்டவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பது பற்றி இந்த ஆய்வில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையிலும் OMICRON

wpengine

கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கை தமிழ் அகதி

wpengine

சிம்புவுடன் நெருக்கமான படங்கள் வெளியீடு:போலீசில் புகார் செய்வேன்:நடிகை ஹன்சிகா

wpengine