உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

57 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரமோ அல்லது, வீசாவோ இன்றி காணப்பட்ட குறித்த இந்திய பிரஜை, நிலாவெளி மஸ்ஜின் வீதியில் நேற்று (16) கைது செய்யப்பட்டிருந்தார்.

திருகோணமலை நீதவான்  நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

கொழும்பில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு

wpengine

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள பிரதேசங்கள்

wpengine

சிறைகைதிகள் 908 பேருக்கு கொரோனா

wpengine