Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

வட மாகாணம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. ஓரளவு பாதுக்கப்பாகவே வட மாகாணம் உள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்பபாண போதனா வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியளாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க் காவிகளாக இருப்பார்கள். இதில் எல்லோரும் அவதானமாக இருக்க வேண்டும்.

எனினும், ஊரடங்கு நிலவரம் மற்றும் கொரோனாவின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூற முடியாது. இது உலகளாவிய தொற்று நோய் என்றும் தெரிவித்தார்.

 

Related posts

ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்

wpengine

மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

wpengine

மஹாபொல அறக்கட்டளை மோசடி – CID விசாரணை

wpengine