Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை(09) காலை 6 மணிக்கு தளர்த்தபட்டு பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்ந்தப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கடும் குளிருக்கு மத்தியில், பின்லாந்தில் நடந்த பலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டம்..!

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று

wpengine

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

wpengine