Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(06) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நாளை(06) கலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமனம்…

wpengine

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

wpengine

ஜுன் 23ம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக முன்னெடுப்பு

wpengine