உள்நாட்டு செய்திகள்

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் (க்கிளினிக்) மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று (31) ஆரம்பமானது.

இதன் போது முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.

குறித்த சேவையை 0770773333 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் oDoc app கையடக் தொலைபேசி யில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இதுதொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் தற்போதைய கொரோனா நோய் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Related posts

கட்டுநாயக்கவிலிருந்து பயணித்த விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கம்…

wpengine

சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்…

wpengine

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

wpengine