உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இஷாந்த் சர்மாவின் ஆக்ரோசத்தை கண்டிக்கிறேன் – தந்தை விஜயகுமார்



இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரருடன் இஷாந்த் சர்மா ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது சரியானது தான் என்று அவரது தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி இஷாந்த் சர்மாவின் தந்தை விஜயகுமார் கூறுகையில் “ஆடுகளத்தில் இஷாந்த் சர்மா நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது. அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது சரியானது தான். இஷாந்த் சர்மா தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.

சிறு வயதில் இஷாந்த் ஒருபோதும் ஆக்ரோஷமாக  இதேபோல் நடந்து கொண்டது கிடையாது. ஒருவேளை அதிக உற்சாகத்தாலும், சந்தோஷத்தாலும் அவர் எல்லை மீறி இருக்கக்கூடும். அந்த தருணத்தில் ஏற்பட்ட கோபத்தினால் நிதானத்தை இழந்து இருக்கலாம்’ என அவர் கூறியுள்ளார்.

(riz)

Related posts

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான அணி விவரம்..

wpengine

இன்று முதல் மேலதிகமாக 5 ரயில்கள் சேவையில்

wpengine

விக்கினேஷ்வரன், அதாவுல்லா, பிள்ளையான் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள்

wpengine