ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிணை முறி மோசடி ரணில் கைது… நாட்டில் இருந்து ரணில் தப்பியோட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இருந்து வெளியேறி உள்ளமைக்கு காரணம் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் தான் கைதாவதை தடுக்கவே என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் கிசிகிசுக்கப்படுகின்றன.

முன்னாள் பிரதமரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசியல் பிரபலம் ஒருவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு நேற்றிரவு(04) 10.05 மணி அளவில், டுபாய் நோக்கி பயணமாகியுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என நாளைய தினம் (06) அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அங்கொட லொக்கா டுபாயில் கைது…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெடி மருந்து தொடர்பான உண்மை தகவல் வெளியானது

wpengine

70 ஆவது சுதந்திர தினத்தில் விசேட தாளத்துடன் லெப்டொப் நடனம்.. (PHOTOS)

wpengine