உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தங்களின் பகுதிகளில் காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய தகவல்களையும் தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நிறைவு

wpengine

இன்றும் பல பிரதேசங்களில் கடும் மழை…

wpengine

அபே ஜனபல கட்சியின் தலைவர் விளக்கமறியலில்

News Editor