Top Story 3உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா ) – இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் 240 ஆக இருந்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நள்ளிரவில் மாத்திரம் 259 ஆக அதிகரித்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸினால் சுமார் 40 நாடுகளில் புதிதாக 80,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, சீனாவுக்கு வௌியே கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மெசிடோனியா மற்றும் கிரேக்கத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, வெனாட்டுவில் புதிதாக நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆகப் பதிவாகியதுடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தானில் தொற்றுக்குள்ளான முதல் இருவரும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் பிரேஸிலிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே , ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

இந்தோனேசியாவில் மீளவும் சுனாமி எச்சரிக்கை…

wpengine

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 2000 பேர் மீட்பு..

wpengine

அல்லாஹுக்காகவே தான் குடும்பத்தோடு தாக்குதலை மேற்கொள்வதாக, சஹ்ரான் கூறியபின்னர் வேறு என்ன கதைக்க உள்ளது..?

wpengine