விளையாட்டு

இந்திய மகளிர் அணி வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) –  மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் பாலி வர்மா 17 பந்துகளில் 39 ஓட்டங்களையும் ஜெமிமா ரெட்ரிகர்ஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை​பெற்று தோல்வியடைந்தது

லீக் சுற்றில் இந்தியா தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டோனியை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் – கோஹ்லி

wpengine

இங்கிலாந்து அணியில் ஆதில் ராஷித் இணைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு…

wpengine

ரபாடா உணர்வினை வெளிப்படுத்தியதில் நியாயம் உண்டு – டு பிளசிஸ் ஐசிசி மீது குற்றம்…

wpengine