உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம் பிரதேசம் முழுவதும் பரவியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மாகாநாயக்க தேரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தம்மாலோக்க தேரருக்கு அனுமதி – பிணை குறித்து நாளை தீர்வு

wpengine

வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து பணம் அறவிட நடவடிக்கை…

wpengine

வாக்களிப்பு நிலையங்களில் விசேட கண்காணிப்பு

wpengine