உள்நாட்டு செய்திகள்

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்



(UTV|கொழும்பு ) – நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாகவும் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களாலேயே பிற்போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகள் தாமதமடைவது தொடர்பில் அனைத்து அதிகாரிகளின் பங்கேற்புடன் அண்மையில் நீதி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் சுமார் 26,000 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சிறைச்சாலைகளில் 12,000 பேருக்கான இட வசதிகளே காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

களுத்துறை அண்டிய பிரதேசங்களுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு..

wpengine

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் உடன் அமுலுக்கு…

wpengine

மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க விசேட ஒரு நாள் திட்டம்..

wpengine