உள்நாட்டு செய்திகள்

புதிய கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன் (17) நிறைவடைகின்றது.

அதற்கமைய இன்று மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் செயற்பாடு பிற்போடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இரத்மலானே அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் கைது…

wpengine

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine