உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்கங்கள் 25 சேர்ந்து இன்று ஆர்ப்பாட்டத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் இன்று(14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்றைய நாளில் பாடசாலைகளில் தடைப்படும் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று

wpengine

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு

Azeem Kilabdeen

மஹிந்த பதவி விலகுகிறார்

wpengine