உள்நாட்டு செய்திகள்

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு ஒரு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – இலங்கைக்கு திரும்ப சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் எவரும் விரும்புவார்களாயின் அவ்விடயம் தொடர்பாக அறிவிக்குமாறு பீஜீங்கிலுள்ள இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் தங்கியிருந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள், இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக பீஜிங்கிலுள்ள சீனாவுக்கான பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவில் தங்கியிருக்கும் மாணவர்கள், சீன சுகாதார பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஆகக் குறைந்த கட்டணமாக 15 ரூபா கோரிக்கை

wpengine

மஹிந்தானந்த’வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

சீரற்றக் காலநிலை காரணமாக பாடசாலை விடுமுறை…

wpengine