ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இனி போராட்டம் நடத்த தனி இடம்; எதற்காக தெரியுமா?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போராட்டத்தை நடத்த ஜனாதிபதி பிரத்தியேகமாக இடத்தினை ஒதுக்கியுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போராட்டத்தின்போது அரச சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்காகவே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு நகரை பிரதானமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுகின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதி செயலக பிரவு, லோட்டஸ் சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இந்நிலைமை அதிகளவிலேயே காணப்படுகின்றன.

ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்பவர்கள் எல்லை மீறி செயற்படும்போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர்புகை பிரயோகம், தடியடி உள்ளிட்ட தாக்குதல்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படும். இதனால் அரச சொத்துக்கள் பெருமளவில் கடந்த காலங்களில் பாதிப்படைந்துள்ளன.

போராட்டங்களை அரச அதிகாரம் கொண்டு தடை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது மாறுப்பட்ட கருத்தினை தோற்றுவிக்கும்.

இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மையில் ஆர்ப்பாட்டகாரர்கள் எவருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் போராட்டத்தை முன்னெடுக்க பிரத்தியேகமாக இடத்தினை ஒதுக்கியுள்ளார்.

Related posts

நிர்வாணமாக பரிசோதனைகளுக்கு தயார் – நிரூபிக்கப்பட்டால் 100 கோடி : ப்ரியங்க சவால்

wpengine

பூங்குடிதீவு மாணவியின் பாலியல் கொலைக்கு விஷேட நீதிமன்றினை நாட வேண்டியதில்லை – பொது பல சேனா அறிவிப்பு

wpengine

உலகிலேயே மிகப் பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிரங்கியது…

wpengine