உள்நாட்டு செய்திகள்

கொரொனோ’வுடன் போராடும் எம்மை தைரியப்படுத்துங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரொனோ வைரசின் தாக்கம் அவதான நிலையில் உள்ள போதிலும், சேவையில் உள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினரை தைரியப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க அதிகாரிகள் இடையே நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையிலும் கொரொனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீனப் பிரஜை ஒருவர் இனங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காலி பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine

பசில் 7000 மில்லியன் செலவழித்தே சஷீந்திர ராஜபக்ஷவை வெற்றியடைய வைத்தார் – சொய்ஸா

wpengine

TNA இனது அறிக்கை அரசியல் யாப்பு வழிநடத்தல் குழு செயலகத்திடம் கையளிப்பு..

wpengine