Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீனாவில் பரவிவரும் வைரஸ்; சுகாதார அமைச்சின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் பரவிவரும் அடையாளம் காணப்படாத வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அவதான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் உனான் மாகாணத்தில் பரவரும் அடையாளம் காணப்படாத ஒருவகை வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த வைரஸ் கடந்த காலங்களில் சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பரவிய ´சார்ஸ்´ என்ற வைரசை ஒத்தது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த எச்சரிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவ்வாறான வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

ஆணைக்குழு விசாரணை முன்னிலையில் ஆஜராக முடியாது – மஹிந்த

wpengine

02 மணி நேரங்களுக்கு வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தம்…

wpengine

Update – ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி…

wpengine