உள்நாட்டு செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு இரு வார காலக்கேடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை  அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் ,இது வரையில் எத்தகைய  தீர்வும்  கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கலாநிதி என். எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம் பெற்ற   ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு  தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தும் இது வரையில் எத்தகைய  தீர்வும்  கிடைக்கப்பெறவில்லை. ஆகவே , இரண்டு வார  காலத்திற்குள் தகுந்த தீர்வு இன்றேல் எதிர்ப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்

wpengine

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு உள்ளது – ஜனாதிபதி..

wpengine

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

wpengine