உலக செய்திகள்

mickey mouse, minnie mouse பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட சுற்றுலா பயணிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மிக்கி மவுஸ் (mickey mouse), மின்னி மவுஸ் (minnie mouse) போன்று டிஸ்னி பாத்திரங்களாக வேடமிடும் நபர்களிடம் சுற்றுலாப் பயணிகள் தவறாக நடந்து கொள்வதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் ஒர்லேண்டோ, ஃப்ளோரிடா மாகாணங்களில் உள்ள தீம் பார்க்குகளில் இதுபோன்று நடந்த சம்பவம் குறித்து அவர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்தனர்.

மிக்கி மவுஸ் போன்று வேடம் அணிந்த பெண்ணை ஒரு மூதாட்டி தன்னை தலையில் அடித்துவிட்டு சென்றதால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் மின்னி மவுஸ் மற்றும் டொனால்ட் டக் (donald duck) வேடம் அணிந்த இரு பெண்கள், தங்களை சிலர் தவறான முறையில் தொடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வால்ட் டிஸ்னி (walt disney) நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பெண்கள் இந்த முறைப்பாடுகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹெலி ஊழலில் சோனியா கைது..?

wpengine

மூன்று நாடுகளுக்கு மலேசியா தடை

wpengine

அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது – அமிர் கான்

wpengine