உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடுகின்றது



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டமானது விஷேட கூட்டமாக நடைபெறவுள்ளது.

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என தகவல் வட்டாரங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட தற்போதைய அரசியல் சூழ்நிலைமைகள் தொடர்பில் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

(riz)

 

Related posts

இதுவரை 785 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

மலிக் மற்றும் ஹரீன் இராஜினாமா செய்து மீளவும் நியமனம்…

wpengine

நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட முறைகேடு – இன்று கணக்காய்வாளர் நாயகம், கோப் குழுவின் முன் சாட்சியம்

wpengine