உள்நாட்டு செய்திகள்வணிகம்

விலைகளை குறைக்குமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு அனைத்து பேக்கரி உரிமையாளர்களிடமும் கேட்டுக் கொள்வதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகள் மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

அதற்கமைய 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாண் தவிர்ந்த உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கேக் வகைகளின் விலைகளையும் 50 ரூபாவால் குறைக்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதார உதவிகள் மன்னாரில் அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு

wpengine

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நடுவர்கள் பரிந்துரையில் குமார் தர்மசேனா..!

wpengine

பல்கலை அனுமதிக்கான அதிகபட்ச வெட்டுப்புள்ளிகள் வௌியீடு..

wpengine