உள்நாட்டு செய்திகள்வணிகம்

மதுபான – சிகரட் விலைகள் குறைக்கப்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொருட்களின் வரி குறைக்கப்பட்டாலும் மதுபான மற்றும் சிகரட் வகைகளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய(04) ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“.. பெறுமதி சேர் வரி 8% இனால் குறைக்கப்பட்ட போதிலும் அது மதுபானம் மற்றும் புகையிலை உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

குறைக்கப்படும் பெறுமதி சேர் வரியானது மதுபான மற்றும் சிகரட் உற்பத்தி தொடர்பில் அறவீடு செய்யப்படும் உற்பத்தி வரியை அதிகரிப்பதன் மூலம் சமனிலை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எந்தவொரு வகையிலும் மதுபானங்கள் மற்றும் சிகரட் வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படாது..” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சர்வதேச நீதிமன்றமோ அல்லது கலப்பு நீதிமன்றமோ கிடையாது – நீதியமைச்சர்

wpengine

உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் வழங்காதவிடத்து ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு…

wpengine

நாடு கடத்தப்பட பியால் புஷ்பகுமார விடுவிப்பு..

wpengine