கேளிக்கை

மனைவியை தாக்கிய பிரபல நடிகர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சென்னை திருவான்மியூரில் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மனைவி ஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து ஈஸ்வர் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஈஸ்வர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. ஜெயஸ்ரீயை ஈஸ்வர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெயஸ்ரீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயஸ்ரீ அடையாறு அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்தனர். அவரது தாயார் சந்திராவும் (54) கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பிகில் பட பாடல்; அட்லீ திடீர் அறிவிப்பு

wpengine

பேய் படங்களை தேர்தெடுக்கும் ஓவியா…

wpengine

திருமண ஆடையுடன் உலாவரும் உடலுறவு (Pre shoot) இதுதானுங்க.. [PHOTOS]

wpengine