உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கட்டுப்பணத்தில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கட்சி சார்பில் பிரேரிக்கப்படும் பட்சத்தில் 25 இலட்சம் ரூபா கட்டுப்பணமும் சுயேட்சை வேட்பாளராயின் 30 இலட்சம் கட்டுப்பணமும் செலுத்தும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்திற்கு அமைய பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் 5,000 ரூபா கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் 7,500 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வஸீம் தாஜுடீனின் சடலத்தினை 10ம் திகதி தோண்ட நீதிமன்ற உத்தரவு

wpengine

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

wpengine

68 பாடசாலைகள் 2017ம் ஆண்டு முதலாம் தவணைக்காக ஜனவரி 2ம் திகதி திறக்கப்படமாட்டாது.

wpengine