உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையினை மறுத்த முன்னாள் ஜனாதிபதி



எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கென்ற கேள்வியில் காலம் கடந்துள்ள நிலையில்; அப்பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இருவர்க்கிடையிலும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் ஒரு போதும் எதிர்க்கட்சி தலைமை பதவியை ஏற்றுகொள்ளப் போவதில்லை என் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

தான் எதிர்கட்சி தலைவர் பதவியை ஏற்றுகொள்ள போவதில்லை, எனினும் எதிர்கட்சியில் இருந்து உறுப்பினர் பங்கினை சரியாக நிறைவேற்றுவேன் என மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ளன.

(riz)

Related posts

தேசபந்து விவகாரத்தில் ரணிலுக்கும் – டிரானுக்கும் புதிய சிக்கல்

Azeem Kilabdeen

கொரோனா தடுப்பூசிகள் விரைவில்

wpengine

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று அரசுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்…

wpengine